புதிதாக பாதித்தவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இருப்பினும், குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், நிறைவடைய இருந்த ஊரடங்கு காலத்தை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதற்கான கட்டுப்பாட்டு தளர்வுகளுடன் கூடிய நெறிமுறைகளும் வெளியிட்டது. இந்நிலையில், சில நாட்களாக, புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை சற்று சீராக அதிகரித்து வருகிறது. இருப்பினும், குணமடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் இதுவரை கொரோனாவில் இருந்து 11,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் 319 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என்றும் இதுவரை நாடு முழுவதும் 10 லட்சத்திற்கு மேல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 75 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கொரோனா மருத்துவமனைகளில் இரண்டரை லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாடு முழுவதும் இதுவரை 20 லட்சம் கவசங்களை அனுப்பி உள்ளோம். இதனிடையே 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி இருக்கின்றோம் என கூறியுள்ளார். பின்னர் கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பு மட்டுமின்றி உலக நாடுகளும் பாராட்டி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றி வந்தாலும், மருத்துவர்களை கவுரவமாக நடத்த வேண்டும் என்றும் இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சியம் வெற்றி பெறுவோம் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…