மத்திய அரசு ஊழியர்களின் வைப்புநிதி (PF) வட்டி விகிதம் மாற்றமா? வெளியனாது அப்டேட்.!
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மற்றும் இதேபோன்ற பிற வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீத வட்டி விகிதமாக இருக்கும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 3 தேதி குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையில், “2024-2025 ஆம் ஆண்டில், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற வருங்கால நிதிகளுக்கு 7.1 என்ற விகிதத்தில் வட்டி செலுத்தப்படும் என்றும் ஜூலை 1 , 2024 முதல் செப்டம்பர் 30, 2024 வரை இந்த விகிதம் அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டிலும்இதே வட்டி விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த முறை வட்டி விகிதத்தில் ஏந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
இதனை, பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்), பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (இந்தியா), அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி, மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்) மற்றும் இந்திய ஆயுதத் துறை வருங்கால வைப்பு நிதி (ஐஓஎஃப்எஸ்) ஆகியவற்றிக்கு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவீத வட்டி விகிதங்களைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றாமல், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) 8.2 சதவீதமாகவும், தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதம் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என என தெரிவிக்கப்பட்டுள்ளது.