73 லிருந்து 74 ஆக அதிகரிப்பு.! இந்தியாவை சீண்டிப் பார்க்கும் கொரோனா.!
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை பல நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக இருந்த நிலையில், தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இத்தாலியிலிருந்து இந்தியா வந்த ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே உலக சுகாதார அமைப்பு கொரோனோவை உலகளாவிய தொற்றுநோய் என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடடதக்கது.