கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. இன்று மட்டும் புதிதாக 62 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 732 லிருந்து 794 ஆக அதிகரித்துள்ளது. ஒருபக்கம் பாதிப்பு அதிகமானாலும் இன்று 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 794 பேரில் 515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். இன்று புதிதாக கண்டறியப்பட்ட 62 பேரில் 18 பேர் வெளிநாடு, 31 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்களும் மற்றும் உள்ளூரில் இருந்த 13 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தற்போது 275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். வீட்டு கண்காணிப்பில் 90,416 பேரும், 668 பேர் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 91,084 பேரை கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…