இனி கால் செய்தால் ரிங்டோன் இவ்ளோ நேரம் அடிக்கும் பஞ்சாயத்தை முடித்து வைத்த ட்ராய்
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது ட்ராய் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பது என்னவென்றால் செல்போன் இன்கம்மிங் கால் 30 நொடிகள் என்றும் லேண்ட்லைன் ரிங்க்டோன் 1 நிமிடம் அடிக்க வேண்டும் என குறி ஏர்டெல் மற்றும் ஜியோ க்கு கிடையே ஏற்பட்டிருந்த பனிப்போரை முடித்து வைத்துள்ளது.
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ஜியோ மீது ட்ராயிடம் அதிரடியாக புகார் ஒன்றை தெரிவித்திருந்தது .அதில் ஜியோ நிறுவனம் வழக்கமான இன்கம்மிங் கால் 45 நொடியிலிருந்து ஜியோ 20 நொடியாக குறைத்துள்ளது என்று தெரிவித்தது .அதன் பின்பு ஜியோ 25 நொடிகளாக மாற்றியது .
இதனால் ஏர்டெல் நிறுவனமும் 25 நொடிகளாக மாற்றியது இதன் வரிசையில் வோடபோன் 25 நொடிகளாக மாற்றப்போவதாக தகவல் வெளியானது .இதனால் ட்ராய் செல்போன் இன்கம்மிங் ரிங்க்டோன் 30 நொடிகளாகவும் லேண்ட்லைன் ரிங்க்டோன் 1 நிமிடமாகவும் இருக்க வேண்டும் என உத்திரவு பிறப்பித்துள்ளது ட்ராய் .