ஒரு வருடத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம்.? பிரபல யுடியூபர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.!  

Kerala IncomeTax raid

கணக்கு காட்டாமல் அதிகம் சம்பாதிப்பதாக கூறி கேரளாவில் பிரபல யுடியூபர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  

தற்போது உள்ள இணைய உலகத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை வைத்துக்கொண்டு , அதனை சரியாக பயன்டுத்தி, அவர்களுக்கு பிடித்தார் போல வீடியோ பதிவிட்டு, அதன் மூலம் பணம் ஈட்டும் வேலையில் யு-டியூபர்கள் களம் இறங்கி வருடங்கள் கடந்து விட்டது. யுடியூபர்கள் தங்கள் பக்கத்தில் பதிவிடும் வீடியோக்கள், பதிவுகளுக்கு எந்த அளவுக்கு பார்வையாளர்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு வருமானம் வரும்.

மேலும் தனி விளம்பரம், விழாக்களுக்கு செல்லும்போது வருமானம் என யூடியூபர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள் என்ற செய்தியும் உண்டு. இந்த வருமானத்தை சரிவர கணக்கில் குறிப்பிடாமல் இருப்பதாக கூறி கேரளாவில் பிரபல யுடியூபர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.

கேரளாவில் ஆலப்புழா, பத்தினம்திட்டா, திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் நடிகை பியல் மானி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட யுடியூபர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். இவர்களில் பலர் வருடத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமாக சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு சிலர் தங்களுக்கு வரும் வருமானத்தை வருமான வரி கணக்கில் காட்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்த ரெய்டு நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்