காங்கிரேஸிடம் ரூ.1,700 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்..!

CONGRESS

Congress: காங்கிரஸ் கட்சியிடம் ரூ.1,700 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் கடந்த 2018-19ம் நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டங்களை தெரிவித்தனர். அதேசமயம் வங்கி கணக்குகள் முடக்கம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் ரூ.1,700 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2017-18, 2020-21 காலகட்டத்திற்கான வரி அபராத தொகையை செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை கூறியதாவது, 2017-18 முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி முறையாக தாக்கல் வருமான வரிக் கணக்கை செய்யவில்லை.

இந்த ரூ.1,700 கோடியில் வட்டியுடன் வருமான வரி மற்றும் அபராதம் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறையின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வருமான வரித்துறை நோட்டீஸை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்