11 கோடி ரூபாய் பாக்கி.! இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்.!
CPI : இந்திய கம்யூனிஸ்ட் கட்டி 11 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியா முழுக்க மக்களவை தேர்தல் அறிவித்து அதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், வருமான வரித்துறை பிரதான அரசியல் கட்சிகள் முறையாக வரிசெலுத்தவில்லை என கூறி நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி முறையாக வருமான வரி செலுத்தவில்லை என கூறி, சுமார் 1800 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதே போல, தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சில வருடங்களாகவே, பழைய பான் நம்பர் (PAN) கொண்டு வருமான வரி தாக்கல் செய்வதாகவும் , இதனால் அவர்களுக்கு 11 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமை இது குறித்து PTI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், வருமானவரித்துறை நோட்டீஸை தாங்கள் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம் என கூறியுள்ளனர்.