முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமானவரி சோதனை! 11 கோடி ரூபாய் பறிமுதல்.!
திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹொசைன், வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) சட்டமன்ற உறுப்பினருமான ஜாகீர் ஹொசைனின் வீடு மற்றும் தொழிற்சாலையில், வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சரின் வீடு, பீடி தொழிற்சாலை மற்றும் எண்ணெய் ஆலைகளில் சோதனை நடத்தப்பட்டது.
ஹொசைனின் வீட்டில் சுமார் ரூ.1 கோடியும், அவரது அரிசி மற்றும் மாவு ஆலையில் இருந்து ரூ.10 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டதாக, அதிகாரி தெரிவித்தார். இது குறித்து கூறிய ஹொசைன், தன்னிடம் முறையான ஆவணங்கள் இருப்பதாகவும், தான் அதனைக் காட்டியபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக, சில நேரங்களில் பணத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும், நான் வரி செலுத்துகிறேன், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம் என்று ஹொசைன், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.