வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யாதவர்கள் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.அதன்படி,முதலில் காலக்கெடு ஜூலை 31 முதல் செப்டம்பர் 30, 2021 வரையும்,பின்னர் தற்போதைய காலக்கெடுவாக டிசம்பர் 31, 2021 வரையும் நீட்டிக்கப்பட்டது.
அந்த வகையில்,2020-21 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.தனிநபர்களுக்கான ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டிய நிலை இருப்பதாக பட்டயக் கணக்காளர்கள் மற்றும் வரி நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில்,கடந்த 2019-20 நிதியாண்டை ஒப்பிடும்போது,நடப்பு ஆண்டான 2020-21 நிதியாண்டில் குறைவான எண்ணிக்கையிலான வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,ஜனவரி 11,2021 அன்று வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ ட்வீட்டின்படி, 2019-20 நிதியாண்டில் 5.95 கோடிக்கும் அதிகமான ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டன (2019-20 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 10,2021). இருப்பினும், டிசம்பர் 15, 2021 வரையிலான தரவுகளின்படி,3.59 கோடிக்கும் அதிகமான ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும்,டிசம்பர் 31, 2021 காலக்கெடுவிற்கு இன்னும் 8 நாட்களுக்கும் குறைவாக உள்ள நிலையில்,கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 46 லட்சத்து 77 ஆயிரம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யாதவர்கள் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி,வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்பவர்கள் https://www.incometax.gov.in/iec/foportal என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…
கொல்கத்தா : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.…
சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் ,…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு…
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…