கொரோனாவால் இறந்தவரின் உடலை 2 நாட்கள் ஐஸ் பெட்டியில் வைத்திருந்த சம்பவம்..காரணம் என்ன.!

Default Image

கொல்கத்தாவில் கொரோனாவால் இறந்த நபர். அதிகாரிகள் யாரும் பதிலளிக்கத் தவறியதால் உடலை 2 நாட்கள் உறைவிப்பான் பெட்டியில் வைத்திருந்த சம்பவம்

சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 71 வயது நபர் திங்கள்கிழமை நகரின் மத்திய பகுதியில் உள்ள ராஜா ராம்மோகன் ராய் சரணியில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று சுகாதாரத் துறை நேற்று முன்தினம் தெரிவித்தன.

திங்களன்று அவரை பார்வையிட்ட மருத்துவர் அவரை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததலில் கொரோனா இருப்பது உறுதியானது. இருந்தாலும், அன்பர் வீடு திரும்பிய பின்னர் அவரது நிலைமை மிக மோசமடைந்தது. அதனால் பிற்பகல் அவர் இறந்து விட்டார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவருக்கு தகவல் கிடைத்ததும், பிபிஇ அணிந்த ஒருவர் வீட்டிற்கு சென்றார். ஆனால் இது காரோனா தொற்று என்று கூறி இறப்புச் சான்றிதழ் வழங்க மறுத்து காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினரிடம் கூறினார்.

காவல் நிலையத்திற்கு சென்றதும் தெரு கவுன்சிலரை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினர். ஆனால் அங்கேயும் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் மேலும் மாநில சுகாதாரத் துறையுடன் தொடர்பு கொள்ளும்படி சொன்னதும் அவர்களையும் தொடர்பு கொண்டோம் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அந்த வகையில் நாங்கள் சுகாதாரத் துறையை அழைத்தபோது ஒரு நபர் எங்களுக்கு வழங்கிய ஹெல்ப்லைனுக்கு நாங்கள் பல முறை கால் செய்தோம் ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை என்று குடும்பத்தினர் கூறினார்கள்.

இறுதியில் குடும்பத்தினர் இறுதி சடங்குகள் வரை உடலைப் பாதுகாக்க ஒரு உறைவிப்பான் பெட்டியில் உடலை வைத்தனர்.மேலும் அவர்கள் கூறுகையில், “நாங்கள் தெரு கவுன்சிலர் மற்றும் மாநில சுகாதாரத் துறைக்கு பல அழைப்புகளைச் செய்தோம், ஆனால் யாரும் எங்களுக்கு உதவவில்லை. அழைப்புகளுக்கும்  பதிலளிக்கப்படவில்லை. அதனால்தான் அவரது உடலை ஒரு உறைவிப்பான் வீட்டிற்குள் வைக்க முடிவு செய்தோம்” என்று குடும்பத்தினர் கூறினார்கள்.

அந்த கொரோனா வைரஸ் நோயாளியின் உடல் அவரது குடும்ப உறுப்பினர்களால் குறைந்தபட்சம் 48 மணிநேரங்களுக்கு ஒரு உறைவிப்பான் பெட்டியில் உள்ளே வைக்கப்பட்டிருந்தது, ஏனெனில் அதை தகனம் செய்ய அதிகாரிகளிடமிருந்து “எந்த உதவியும்” வரவில்லை என்ற கருத்தை முன்வைத்தனர்.

அடுத்தாக இறுதியில் கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் (கே.எம்.சி) ஊழியர்கள் வீடிற்கு வந்து உடலை தகனம் செய்வதற்காக எடுத்துச் சென்றதாக குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்