உத்தரகாண்டில், சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் சாதிமறுப்புத் திருமணம் செய்வதால், பலர் பயங்கரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆளும் பாஜக அரசு திருமணத்தின் பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிற நிலையில், உத்தரகாண்ட் அரசு இப்படி ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில சமூக நலத்துறை அதிகாரி கூறுகையில், சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அனைத்து சாதி மறுப்பு மற்றும் மத மாற்ற திருமணங்களுக்கும் பணம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும், சாதி மறுப்பு திருமணத்தின் ஊக்கத் தொகையை பெறுவதற்கு, திருமண ஜோடியில் ஒருவர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை அதிகாரி தீபன்கர் கூறுகையில், சாதி மற்றும் மத மாற்ற திருமணங்களுக்கு, ஊக்கத்தொகை வழங்குவது தேசிய ஒற்றுமை உறவை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் அதற்கு தகுதியான ஜோடிகள் ஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…