மாநிலங்களவைக்கு தேர்வான புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதம் அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட கே.பி.முனுசாமி, தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பதவியேற்றனர். இன்று மாநிலங்களவை கூட்டம் தொடங்கியது.இரவு 7 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் தான் மாநிலங்களவைக்கு தேர்வான புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுள்ளனர். திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ராஜ்யசபா எம்.பி.க்களாக பதவியேற்றுள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…