மேற்கு வங்கத்தில் டயமண்ட் துறைமுகம் பகுதி வாக்கு எண்ணும் மைய்யத்தில் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துளளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி சனிக்கிழமை அன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் அறிவித்த நாள் முதல் தற்போது வரை மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின. மேலும் 697 வாக்குச்சாவடிகளில் நேற்று மருவாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் 8 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் டயமண்ட் துறைமுகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…