உத்தரகண்டில் “நமாமி கங்கே” திட்டத்தின் கீழ் 6 திட்டங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.!
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ திட்டத்தின் கீழ் 6 முக்கிய திட்டங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி மூலம் இன்று காலை 11 மணிக்கு “நமாமி கங்கே” கீழ் ஆறு திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும், கங்கை ஆற்றில் செய்யப்படும் கலாச்சாரம் மற்றும் புத்துணர்ச்சி நடவடிக்கைகளை வெளிப்படுத்த சாந்தி காட்டில் “கங்கா அவ்லோகன்” என்று பெயரிடப்பட்ட கங்கை பற்றிய ஒரு அருங்காட்சியையும் தொடங்கிவைக்கிறார்.
இந்நிலையில், ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் மாவட்டங்களில் கங்கை ஆற்றில் சுமார் 80% கழிவு நீர் சுத்தகரிக்கப்டுகிறது. இதனால், அங்கு முதலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைப்பதினால் கங்கையை சுத்தமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.