மாநகராட்சி தேர்தல் களோபரம்.! பாஜக வேட்பாளரின் கணவரை தாக்கிய சமாஜ்வாடி எம்எல்ஏ.! 

UP localbody election

உத்திர பிரதேசத்தில் அமேதி மாவட்டத்தில் காவல்துறையினர் முன்னிலையிலேயே பாஜக வேட்பாளரின் கணவரை சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ தாக்கியுள்ளார். 

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட வாக்குப்பதிவு மே 4ஆம் தேதி 37 மாநகராட்சிகளுக்கு நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (மே 11) 2ஆம் கட்டமாக 760 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் அமேதி மாவட்டத்தில் உள்ள பாஜக மாநகராட்சி தேர்தல் வேட்பாளர் ரஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் இன்று (புதன்கிழமை) சரமாரியாக தாக்கினார் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவமானது, அமேதி மாவட்டத்தில் உள்ள கௌரிகஞ்ச் கோட்வாலி காவல் நிலையத்திற்குள் நடந்துள்ளது அதிர்ச்சிக்குரிய விஷயமாகும்.

அந்த வீடியோவில் எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீசார் சமாதானப்படுத்த முயற்சிக்கும்போது, திடீரென சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் பாஜக வேட்பாளரின் கணவரை போலீசார் முன்னிலையிலேயே அடித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்