சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தது.? உ.பி பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போதே எதிர்கட்சியினர் தொடர் அமளி.!
உத்திர பிரதேசத்தில் சட்டசபையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரை வாசிக்கையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.
உத்தரப்பிரதேச , லக்னோவில் உள்ள சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிறது. இதனை முன்னிட்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் முன்பு உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல் தனது உரையை வாசித்து கொண்டு இருக்கும்போதே சமாஜ்வாடி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுப்பட தொடங்கிவிட்டனர்.
பின்னர் தொடர் அமளியில் ஈடுபட்ட சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘ உத்திர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சமீபத்தில் தாயும் மகளும் தீயில் கருகி இறந்தனர். அது ஏன் என் கேட்டோம். மாநில அரசு, நிர்வாகம் மக்களை ஏமாற்றுகிறது. மக்களுக்கு கனவுகளை மட்டும் காட்டுகிறது.’ என அவர் ஆளும் கட்சியை கடுமையாக குற்றம் சாட்டினார்.