ஒரே பள்ளியில் 3 மாணவிகள் தொடர் தற்கொலை.! காதல் விவகாரமா.? போலீசார் விசாரணை…
உத்திர பிரதேசத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேர் அடுத்தடுத்து சுமார் 10 நாட்களுக்குள் தற்கொலை செய்துகொண்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் செயல்பாட்டு வரும் உயர்நிலை பள்ளியில் கடந்த டிசம்பர் 10 முதல் 18 வரையில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
முதலில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்து 12ஆம் வகுப்பு மாணவிகள் ஒருவர் ஊரில் உள்ள குளத்தில் குதித்தும், இன்னொருவர் பூச்சிமருந்து குடித்தும் தற்கொலை செய்து கொண்டார்.
சுமார் 10 நாள் இடைவெளியில் இந்த 3 தற்கொலைகள் நடைபெற்றதால் காவல்துறையினர் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இந்த தற்கொலைக்கு பின்னர் ஏதேனும் விவகாரம் இருக்கிறதா எனவும், காதல் விவகாரமா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர் .
இதில், 12 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அந்த மாணவிகளின் பெற்றோர், உறவினர், நண்பர்கள், ஆசிரியர்கள் என் பலரிடம் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.