காப்பி அடித்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை ! உத்திரப் பிரதேசத்தில் 165 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை
உத்திரப் பிரதேசத்தில் காப்பி அடித்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக 165 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
உத்திரப் பிரதேசத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதாக புகார்கள் எழுந்து வந்தது.இந்நிலையில் காப்பி அடித்தலை தடுக்க அங்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டது.இதனால் அங்கு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு தேர்வில்,165 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. மேலும் இது தொடர்பாக உத்திரப் பிரதேச பள்ளி கல்வித்துறை தரப்பில் கூறுகையில் ,10-ஆம் வகுப்பு தேர்வின் போது, காப்பி அடித்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது தான் ,தேர்வு முடிவுகள் இப்படி வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.