பொது சிவில் சட்டம்… மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன.?

Default Image

பொது சிவில் சட்டம் என்றால் என்ன என்பது பற்றியும், அதன் தற்போதைய நிலவரம் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.  

பாஜக ஆட்சிக்கு வரும்போது அவர்கள் குறிப்பிட்ட முக்கிய சட்டங்களை ஒவ்வொன்றாக அப்போது நிறைவேற்றி வருகின்றனர். அதில் முக்கியமாக காஷ்மீரில் செயல்பாட்டில் இருந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு அடுத்ததாக சிஏஏ எனும் குடியுரிமை சட்டம்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பேசப்படும் சட்டம் என்றால் அது பொது சிவில் சட்டம் தான்.

பொது சிவில் சட்டம் என்பது என்னவென்றால் அதாவது இந்தியாவில் பல்வேறு மதங்கள், இனங்கள் இருக்கின்றது. அவற்றில் அவர்களுக்குள்ளே ஓர் கட்டுப்பாடு ஒன்றும் இருக்கிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள், பழங்குடியினர் அவர்கள் அவர்களுக்குள்ளே திருமணம், விவாகரத்து உள்ளிட்ட குடும்ப பிரச்சனைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது.  இதனை கலைந்து அனைத்து இன மத மக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை உருவாக்குவதே இந்த பொது சிவில் சட்டத்தின் நோக்கமாகும்.

இந்த பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதற்காக வேலைகளை ஆரம்பித்து அதற்காக மாநிலங்களில் பொது மக்களின் கருத்தை கேட்கவும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில்,நேற்று நடைபெற்ற மாநிலங்களவை கட்டத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவர்களிடம் பொது சிவில் சட்டம் தற்போது உள்ள நிலவரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், பொது சிவில் சட்டம் குறித்த வரைவு 21வது சட்ட ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் முடிவு எடுக்கும் முன்னரே 21வது சட்ட ஆணையம் காலாவதி ஆகிவிட்டது. இதுவரையில் பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவும், 22வது சட்ட ஆணையம் இது குறித்த முடிவுகளை விருப்பப்பட்டால் எடுக்கலாம் எனவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

சட்ட ஆணையம் என்பது உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய ஓர் சட்ட அமைப்பு குழுவை மத்திய அரசு உருவாக்கும். அந்த சட்ட குழுவானது, மத்திய அரசு இயற்றும் சட்டங்களில் உள்ள சாதக பாதகங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்