இந்த மாநிலங்களில் 18 வயதிற்குள் 40% பெண்களுக்கு திருமணம் நடந்துள்ளது.. கணக்கெடுப்பில் தகவல்..!
பீகார், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளது என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அங்கு 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஆந்திரா (12.6 சதவீதம்), அசாம் (11.7 சதவீதம்), பீகார் (11 சதவீதம்), திரிபுரா (21.9 சதவீதம்), மேற்கு வங்கம் (16.4 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் 15-19 வயதுடைய பெண்கள் அதிக எண்ணிக்கையில் தாய்மார்கள் அல்லது கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் (40.8 சதவீதம்), திரிபுரா (40.1 சதவீதம்) மற்றும் மேற்கு வங்கம் (41.6 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் 20-24 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அசாம் (31.8 சதவீதம்), ஆந்திரா (29.3 சதவீதம்), குஜராத் (21.8 சதவீதம்), கர்நாடகா (21.3 சதவீதம்), மகாராஷ்டிரா (21.9 சதவீதம்), தெலுங்கானா (23.5 சதவீதம்), தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தமன் & டியு (26.4 சதவீதம்) அங்கு 20-24 வயதுடைய பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 21 வயதிற்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட ஆண்கள், பெண்களுடன் ஒப்பிடுகையில், கணக்கெடுக்கப்பட்ட மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களும் இதோ,
அசாம் (21.8 சதவீதம்), பீகார் (30.5 சதவீதம்), குஜராத் (27.7 சதவீதம்), திரிபுரா (20.4 சதவீதம்), மேற்கு வங்கம் (20 சதவீதம்), லடாக் (20.2 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25-29 வயதுடைய ஆண்களில் 21 வயதை அடைவதற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம், பீகார், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, ஆந்திரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், லடாக், கர்நாடகா, கோவா, மேற்கு, மகாராஷ்டிரா வங்காளம், மிசோரம், கேரளா, லட்சத்தீவு, ஆகியவை இப்போது முதல் கட்டமாக ஆய்வுகளை வெளியிடப்பட்டுள்ளன.
மற்ற மாநிலங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்டம் ஆய்வு அறிக்கை அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.