எல்லை மோதல் விவகாரம்.! நாடாளுமன்றத்தில் பாஜகவினர் – காங்கிரஸார் கடும் அமளி.!
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜகவினர் இடையே தொடர் வாதங்களால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாநிலங்களவையில் பாஜகவினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் அமளி ஏற்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தில் நடந்த எல்லை மோதல் குறித்து பாஜக – காங்கிரசார் மத்தியில் விவாதம் ஏற்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பேசிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசினார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய கார்கே, நான் ஒற்றுமை யாத்திரையில் பேசிய கருத்துக்களை நாடாளுமண்டத்திற்கு வெளியே நான் பேசிய கருத்துக்களை இங்கே கொண்டு வருகிறார்கள். சுதந்திர போராட்டத்தில் பாஜகவுக்கு பங்கு இல்லை என கூறினார்.
இதற்கும், பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜகவினர் இடையே தொடர் வாதங்களால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.