அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பிற்கு ‘இந்தியா (I.N.D.I.A)’ என பெயர் வைத்து செயல் பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்தியா என்ற பெயரை ஆளும் பாஜக அரசு தவிர்த்து வருகிறது என்றே கூறலாம். தற்போது, இந்தியா எனும் பெயருக்கு பதில் பாரத் எனும் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற பாஜகவினர் இடையே குரல் எழுந்தது.
அந்தவகையில் இந்தாண்டு ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது. அப்போது, குடியரசுத் தலைவர் அழைப்பிதழில் President of India என்பதற்கு பதில் President of Bharat என அச்சிடப்பட்டிருந்தது. அது போல் ஜி20 மாநாட்டு மேடையில் பிரதமர் மோடி பேசிய போது அவரது முன்னால் இருந்த பெயர் பலகையில் பாரத் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பாஜகவினர் சமூகவலைத்தளங்களில் இந்தியாவுக்கு பதில் பாரத் எனவும் மாற்றினார்.
கஜகஸ்தான் சுரங்கத்தில் தீ விபத்து! 21 பேர் பலி…18 பேர் காயம்!
பெயரை மாற்றம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து இருந்தது. இருப்பினும், அரசு நிகழ்வுகள், ஆணைகள் மற்றும் சட்டங்கள் என பல்வேறு இடங்களில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) உருவாக்கிய உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்து குறித்து தான் தற்போது பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது, ரயில்வே அமைச்சகத்தின் முன்மொழிவில், தளவாடச் செலவு, சரக்குகளின் மாதிரிப் பங்கு, நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி விவாதிப்பது என ஒவ்வொரு அம்சத்திலும் “இந்தியா” என்பதற்குப் பதிலாக “பாரத்” என்று பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, மத்திய அமைச்சரவைக்கு ரயில்வே அமைச்சகம் அளித்த முன்மொழிவில் “இந்தியா” என்பதை கைவிட்டு, முழு ஆவணத்திலும் “பாரத்” என்று மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
கல்யாண வீட்டில் கூட ஆளுநரை நினைத்து, நினைத்து ஏன் கதற வேண்டும்? – வானதி சீனிவாசன்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) குழு தனது அனைத்து பள்ளி பாடப்புத்தகங்களிலும் “இந்தியா” என்பதை “பாரத்” என்று மாற்ற முன்மொழிந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது. பாடப்புத்தகங்களில் “இந்தியா” என்ற பெயரை “பாரத்” என்று மாற்றவும், பாடத்திட்டத்தில் “பண்டைய வரலாறு” என்பதற்கு பதிலாக “கிளாசிக்கல் ஹிஸ்டரி” ஐ அறிமுகப்படுத்தவும், மேலும், பாடத்திட்டத்தில் இந்திய அறிவு அமைப்பை (ஐ.கே.எஸ்) சேர்க்கவும் அந்த குழு பரிந்துரைத்தது.
இந்த சூழலில் ரயில்வேயின் அமைச்சகத்தின் முன்மொழிவு பற்றி பேசுகையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை, மற்றும் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, வரும் நாட்களில் அரசு ஆவணங்களில் பாரத் அதிகளவில் பயன்படுத்தப்படும். அரசியலமைப்பில் “இந்தியா” மற்றும் “பாரத்” ஆகியவை ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே அமைச்சரவை முன்மொழிவில் நாட்டை “பாரத்” என்று குறிப்பிடுவது தவறு அல்ல என்று சில வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவிற்குப் பதிலாக “பாரத்” பயன்படுத்தப்பட்ட பலவற்றில் ரயில்வே அமைச்சகத்தின் முன்மொழிவுதான் முதன்மையானது என்று கூறப்பட்டுள்ளது.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…