புதிய வரிமுறையில் வரி செலுத்துவோர் வருமான வரி உச்சவரம்பு 5 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24க்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்றத்தில். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
ஆரம்பத்தில் மத்திய அரசால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்து 2023- 2024க்கான பட்ஜெட்டை வாசித்து வருகிறார். அதில் பல்வேறு திட்டங்கள் குறித்தும் , அதற்காக ஒதுக்கப்படும் நிதியினை பற்றியும் அறிவித்து வருகிறார்.
ஏற்கனவே சில முக்கிய திட்டங்களான, ரயில்வே , நர்சிங் கல்லூரிகள், வறட்சியை சமாளிக்க கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி, விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம், நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.75,000 கோடி, சிறு குறு , நடுத்தர தொழில்கள் தொடங்க, அவற்றை மேம்படுத்த கடன் உதவி அளிக்கப்படும் வகையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி என பல்வேறு திட்டங்களை தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா என எதிர்பார்த்த நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. புதிய வரிமுறையில் வரி செலுத்தி வருவோருக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு 5 லட்சமாக இருந்த ஆண்டு வருமான உச்ச வரம்பு தற்போது 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு ஆண்டு வருமானம் 7 லட்சம் வரையில் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை என அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
7 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் 3 லட்சத்தில் இருந்து கணக்கிட்டு வருமான வரி செலுத்த வேண்டும். அதே போல வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்ச ரூபாய் ஆண்டு வருமானத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…