நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது “சந்திராயன் 3” வெற்றி குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் எம்பி டேனிஷ் அலியை பார்த்து பாஜக எம்பி ரமேஷ் பிதுரி ‘தீவிரவாதி’ என கடும் சொற்களால் விமர்சித்து பேசினார். இவரது கருத்துக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பகுஜன் சமாஜ்வாடி, காங்கிரஸ் , திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தனி தனித்தனியாகவும், இந்தியா கூட்டணி சார்பாகவும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த சமபவம் குறித்து பாஜக எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது போன்று மீண்டும் நிகழ்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனஎச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், பாஜக எம்பி சர்ச்சையாக பேசியதை குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழசை சௌந்தராஜன் கோவையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், நாடாளுமமன்றத்தில் அவ்வாறு நடந்து கொண்டிருக்க கூடாது. தவறு யார் செய்தாலும் அது தவறு தான். அதுகுறித்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என தனது கருத்தை தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற முதல் நாள் கூட்டத்தொடர், திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படாதது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமரிசித்து இருந்தார். அவர் பழங்குடியின் பெண், கணவரை இழந்தவர் என்ற காரணத்தாலேயே அழைக்கப்படவில்லை என்றும், ஆனால் இந்தி நடிகை எல்லாம் அழைக்கப்பட்டு இருந்தனர் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து தமிழிசை பேசுகையில், இவரே நடிகர் தான், நடிகை அழைக்கப்பட்டதற்கு இவர் குற்றம் சொல்கிறார். இப்பொது திரௌபதி முர்முவுக்கு ஆதரவு கூறும் இவர்கள் , குடியரசு தலைவர் தேர்தலின் போது பழங்குடியின பெண் என ஏன் வாக்களிக்கவில்லை எனவும் தமிழிசை விமரிசித்து இருந்தார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…