மீட்டுக் கொண்டு வருவதில் நாம் வெற்றியடைந்து வருகிறோம் – பிரதமர் மோடி உரை
மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பல சிலைகளையும், கலைப்பொருள்களையும் மீட்டுக் கொண்டு வருவதில் நாம் வெற்றியடைந்து வருகிறோம் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார்.
“மன் கி பாத்” நிகழ்ச்சியை கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கினார்.மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார்.இந்த உரையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களோடு உரையாடுகிறார்.
அதன்படி தான் இன்றும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நமது பாரம்பரியத்தில் விலை மதிப்புமிக்க மரபுச் சின்னங்களும், அடையாளங்களும் கடத்தப்படுவதை தடுப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், பல சிலைகளையும், கலைப்பொருள்களையும் மீட்டுக் கொண்டு வருவதில் நாம் வெற்றியடைந்து வருகிறோம் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார்.