கடந்த 4 நாட்களில் மட்டும் இந்தியாவில் 44.54 லட்சம் பேருக்கு கொரானா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – மத்திய சுகாதார அமைச்சகம்!
இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 லட்சத்து 54 ஆயிரத்து க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு கொண்டிருந்த நிலையில், தற்பொழுது சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 16ம் தேதி முதல் தடுப்பூசி போடுவதற்காக பணிகள் துவங்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 4 லட்சத்து 54 ஆயிரத்து 49 பேருக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த 3 நாட்களில் தடுப்பூசி போட்டவர்களில் மிக குறைந்த அளவாக 0.18 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், 0.002 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸால் தினசரி ஏற்படக்கூடிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 140 க்கும் கீழ் குறைந்துள்ளதாகவும், தற்பொழுது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக குறைந்துவிட்டதாகவும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.