#Breaking:சற்று ஆறுதல்…மீண்டும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 1059 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,20,80,664 ஆக உள்ளது.
- இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,49,394 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 21,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,20,80,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,059 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 5,01,114 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,30,814 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,02,47,902 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 13,31,648 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாடு முழுவதும் இதுவரை 1,68,98,17,199 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 47,53,081 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.