இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்திற்கு கீழ் பதிவான தொற்று பாதிப்பு…!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,166 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 437 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,22,50,679 ஆக உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 25,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 7,771 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,22,50,679 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 437ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,32,079 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,830 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,14,48,754 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 369846 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாடு முழுவதும் இதுவரை 55,47,30,609 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 88,13,919 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.