இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,48,421 பேருக்கு கொரோனா.. 4,205 பேர் உயிரிழப்பு!!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மதியா சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 23,340,938 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுபோல் கடந்த 24 மணிநேரத்தில் 4,205 பேர் கொரோனவுக்கு பலியான நிலையில், இதுவரை 2,54,197 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 193,826,42 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 82.75% ஆகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 16.16% ஆகவும் உள்ளன. தற்போது, கொரோனா வைரஸால் 37,040,99 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 17,52,35,991 ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களில் 24,46,674 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தடுப்பூசி போடப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதனிடையே, உலக முழுவதும் 160,334,125 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3,331,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 138,098,126 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா 33,550,115 பாதிப்புகளுடன் முதல் இடத்திலும், இந்தியாவில் 23,340,938 பேர் பாதிக்கப்பட்டு இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
????Total #COVID19 Cases in India (as on May 12, 2021)
▶️83.04% Cured/Discharged/Migrated (1,93,82,642)
▶️15.87% Active cases (37,04,099)
▶️1.09% Deaths (2,54,197)Total COVID-19 confirmed cases = Cured/Discharged/Migrated+Active cases+Deaths#StaySafe pic.twitter.com/zpqepH8R5Y
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) May 12, 2021