#Breaking:கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு;31 பேர் இறப்பு.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,259 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,233 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 26 குறைவு.நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,23,215 ஆக உயர்ந்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை:
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 35 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,21,101 பேர் உயிரிழந்துள்ளனர்.
குணமடைந்தோர்:
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 1,876 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,87,410 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சிகிச்சை:
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,704 ஆக உள்ளது.
தடுப்பூசி:
நாடு முழுவதும் இதுவரை 1,83,82,41,743 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 26,34,080 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.