4000-ஐ கடந்த கொரோனா.! 24 மணிநேரத்தில் 312 பேருக்கு பாதிப்பு.!

Covid 19 Cases in India

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது.

புதிய கொரோனாவிற்கு தடுப்பூசி தேவையா..? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

கடந்த 24 மணிநேரத்தின் படி இந்தியாவில் 312 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4054ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,33,334 என உயர்ந்துள்ளது.

மாநில அளவில் அதிகபட்சமாக கேரளாவில் 128 பேருக்கும், கர்நாடகாவில் 73 பேருக்கும், மகாராஷ்டிராவில் 50 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 பேருக்கும், தெலங்கானாவில் 8 பேருக்கும் , உத்திர பிரதேசத்தில் 7 பேருக்கும் , மேற்கு வங்கத்தில் 2 பேருக்கும், ராஜஸ்தானில் 11 பேருக்கும், புதுச்சேரியில் 3 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 2 பேருக்கும், ஆந்திர பிரதேசத்தில் 5 பேருக்கும், டெல்லியில் 7 பேருக்கும், கோவாவில் 5 பெருக்கும் , குஜராத்தில் 3 பேருக்கும், அசாம், பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

JN.1கொரோனாவிற்கு தற்போது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த புதிய துணை மாறுபாட்டின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் நிம்மதியான விஷயம். JN.1 துணை மாறுபாட்டின் அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், சில சமயங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் ஆகியவை இருக்கும்.  இவை பொதுவாக ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்