#Breaking:மக்களே கவலை வேண்டாம்…மீண்டும் 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா;சரிந்த பலி எண்ணிக்கை!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 3,116 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2503 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 600 குறைவு கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,29,93,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 47 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,15,877 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 4,377 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,41,449 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 38,069 ஆக இருந்த நிலையில்,தற்போது 36,168 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,80,19,45,779 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 4,61,318 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.