கடந்த 2 நாட்களில் மட்டும் 54 பேருக்கு நாய் கடித்துள்ளது – மத்திய பிரதேச மருத்துவமனை!

மத்தியப் பிரதேசத்தில் உலா விதிஷா எனும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் கடந்த இரு நாட்களில் அதிக அளவில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மருத்துவமனையின் மருத்துவர் சமீர் கிரார் கூறுகையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி 30 பேர் நாய்க்கடி என்று மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும், ஏப்ரல் 15ஆம் தேதி 24 பேர் மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை எடுக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த 2 நாட்களில் மட்டும் 54 பேருக்கு நாய் கடித்து சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும், நான்கு பேர் நாய்க்கடியால் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாய்கடித்ததால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நபர்களுக்கு முறையாக ஊசிகள் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025