போர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில், அதானி 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.!
கவுதம் அதானி, தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ரிசர்ச்- இன் புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக சரிந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். மேலும் இதனை அடுத்து போர்ப்ஸ் வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-10இல் இருந்து வெளியேறியிருக்கிறார்.
இதற்கு முன் அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேர்களில் ஒருவர் மற்றும் ஆசியாவில் இந்தியர்களில் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, சமீபத்தில் இவரை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார்.
கவுதம் அதானி தற்போது போர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22- வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் நீடிக்கின்றனர்.