கூட்டணி பேச்சு வார்த்தை முடிவில் பா.ஜ.க கேரளாவில் 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது
- கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் பா.ஜ.க 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
- பாரத் தர்ம ஜனசேனா கட்சி 5 தொகுதிகளில் , கேரள காங்கிரஸ் 1 தொகுதிகளில் போட்டியிடுவதாக பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் தெரிவித்தார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்கேரளா மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 23–ந்தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து வருகிறது.
கேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா, கேரள காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருந்தது. நேற்று இறுதி பேச்சுவார்த்தை முடிந்தது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் பா.ஜ.க 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரத் தர்ம ஜனசேனா கட்சி 5 தொகுதிகளில் , கேரள காங்கிரஸ் 1 தொகுதிகளில் போட்டியிடுவதாக பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் தெரிவித்தார்.