மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சி  திட்டம்…..நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்…..பிட்ச் நிறுவனம் அதிர்ச்சி தகவல்…!!

Default Image

மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டம் இடம் பெற்றால் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்று பிட்ச் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முடிந்து போன 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அதிக சலுகைகள் இடம் பெறும் பட்சத்தில் அதிக நிதி பற்றாக்குறை ஏற்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2018-19ம் நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஏற்கனவே இலக்காக அறிவித்த 3.3 சதவீதமாக நிர்ணயித்துள்ளதை குறிப்பிட்டு காட்டிய பிட்ச் நிறுவனம், மூலதனச் செலவுகள் மற்றும் பணப் பட்டுவாடா நடவடிக்கைகளை மார்ச் மாதத்திற்கு பின்பு தள்ளிவைத்தால் மட்டுமே நிதிபற்றாக்குறை இலக்கை எட்ட முடிவது சாத்தியம் என்று தெரிவித்துள்ளது.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு, பொதுத்தேர்தலை கருதி, சீர்திருத்த திட்டங்களுக்கு இடமளிக்காமல், கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவித்தால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் பிட்ச் நிறுவனம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்