சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட திருநங்கை மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில், 2 மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவிகள் 88.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 79.40 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்களை விட மாணவிகள் 9 சதவீதம் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தத்தேர்வில் திருநங்கை மாணவர்கள் 83.3 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களது தேர்ச்சி விகிதம், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைவிட அதிகம். மேலும், தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும், சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தையும், டெல்லி மண்டலம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது.