கேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் மேலும் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 94 பேரை வீடுகளிலும், 9 பேரை மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தி வைத்து மருத்துவக் குழுக்கள் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளத்தில் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கி, ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிபா வைரஸ் தாக்குதல் தொடர்பாக 18 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 12 பேருக்கு நிபா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இதில் 10 பேர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகவும், 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கே.கே.ஷைலஜா குறிப்பிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் இல்லை என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
94 பேரை வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்து மருத்துவக் குழுக்கள் கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 9 பேர் மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில், பெரம்பரா ((Perambara)) என்ற பகுதியில், வவ்வால்கள் இறந்துகிடந்த கிணறு அமைந்துள்ள வீட்டில் இருந்தே நிபா வைரஸ் தாக்குதல் பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கிணற்றை பாதுகாப்பான முறையில் மூடி சீல்வைத்துள்ளனர்.
பெரம்பரா மருத்துவமனையில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளித்த 3 செவிலியர்களும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், தலைவலியால் அவதிப்பட்டு வரும் அவர்களுக்கு நிபா வைரஸ் தாக்கியுள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஏற்கெனவே ஒரு செவிலியர் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதால், மருத்துவமனை பணியாளர்களிடையேயும் அச்சம் நிலவுகிறது.
இதேபோல காய்ச்சல் அறிகுறியுடன் பலர் மருத்துவமனைகளுக்கு படையெடுப்பதால் பீதி காணப்படுகிறது. மத்திய சுகாதாரக் குழுக்களும் கண்காணித்து வருகின்றன. நிலைமை கட்டுக்குள் இருப்பதால் அச்சமடைய வேண்டாம் என்று கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…