5ஆம் கட்ட தேர்தல் நிலவரம்.! இதுவரை 10.28 சதவீதம் வாக்குப்பதிவு.!
சென்னை: 5ஆம் கட்ட வாக்குபதிவில் 9 மணி வரையில் 10.28 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 தொகுதிகளுக்குமான தேர்தல் 4 கட்டங்களில் நிறைவுபெற்ற நிலையில் இன்று (மே 20) 5ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேசம்(14), பீகார்(5), ஜம்மு காஷ்மீர்(1), ஜார்கண்ட்(3), லடாக்(1), மகாராஷ்டிரா(13),ஒடிசா (5), மேற்கு வங்கம் (7) ஆகிய மாநிலங்களில் 49 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். உ.பி மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ்வாடி தலைவர் மாயாவதி, மும்பை வடக்கு தொகுதியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மும்பை தெற்கு தொகுதியில் ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்தி காந்த தாஸ் மேலும், தொழிலதிபர் அனில் அம்பானி , நடிகர்கள் அக்ஷய் குமார் , சான்யா மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் பல்வேறு பிரபலங்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
காலை 9 மணி நிலவரப்படி, 10.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது என தகவல் வெளியாகியுள்ளது. 8 மாநில வாரியாக பதிவான வாக்குகள் பின்வருமாறு…
- உத்திர பிரதேஷம் : 12.89%.
- ஒடிசா : 6.87%.
- பீகார் : 8.86%.
- ஜம்மு காஷ்மீர் : 7.63%.
- ஜார்கண்ட் : 11.68%.
- லடாக் : 10.51%.
- மஹாராஷ்டிரா : 6.33%.
- மேற்கு வங்கம் 15.35%.