இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில், காசி தமிழ் சங்கமம் உத்வேகம்; பிரதமர் மோடி.!
வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் இந்தியாவின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழ் கலாசாரம்: காசியில் தமிழ்நாட்டின் கலாசாரம் கொண்டாடப்பட்ட விதம் அற்புதம் என விவரித்த பிரதமர் மோடி, கடந்த 2022 நவம்பரில் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் இந்தியாவின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்த உதவியது என்று கூறினார்.
காசி தமிழ் சங்கமம்: கடந்த நவம்பரில் பிரதமர் மோடி, வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்ச்சியான ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வாரணாசியில் நடந்த சங்கமத்தில் நடந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களுக்கு, மோடி தமிழில் கடிதம் எழுதி, அவர்களை ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்’ கொடி ஏந்தியவர்கள் என்று வர்ணித்தார்.
மோடி மகிழ்ச்சி: இந்த திட்டத்தின் மூலம் காசியின் கலாச்சாரம் மற்றும் அதன் மக்களை நெருங்கிய இடங்களிலிருந்து மற்ற பகுதிகளிலுள்ள மக்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றதாக மோடி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
வாரணாசி-தமிழ்நாடு உறவு: காசியில் தமிழ் மொழியின் அழகும், தமிழகத்தின் செழுமையான கலாச்சாரமும் கொண்டாடப்பட்ட விதம் அற்புதமானது என்று பிரதமர் மோடி மேலும் கூறினார். வாரணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளை குறிப்பிட்ட மோடி, தனது கடிதத்தில் கலாச்சாரமிக்க தமிழ் மக்களுடன் காசிக்கு நீண்ட தொடர்பு உள்ளது.
வரலாற்று நினைவு: காசி தமிழ் சங்கமம் அந்த வரலாற்று நினைவுகளை மீண்டும் எழுப்பியுள்ளது. நமது நாட்டின் ஒற்றுமையை ஆழப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது, அதற்கு இந்த காசி தமிழ் சங்கமமும் ஒரு வலுவான அடித்தளம் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.