சசி தரூர் ஸ்டைலில், லீவ் லெட்டர் கேட்ட நபர், சாட் GPTயின் பதில் வைரல்.!
சசி தரூர் ஸ்டைலில், தனக்கு லீவ் லெட்டர் எழுதுமாறு கேட்ட நபருக்கு, சாட் GPT அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாட் GPT(ChatGPT), தற்போது உலக மக்களிடையே வைரலாகி வரும் ஒரு AI வகை சாட் பாட்(CHAT BOT) ஆகும், பயனர்கள் பலரும், சாட் GPTயுடன் மேற்கொண்ட வேடிக்கை உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை, சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த வகையில் நிஷாந்த் விஜயன் என்ற ட்விட்டர் பயனர், தனது சிறிய பரிசோதனையை ஸ்கிரீன்ஷாட்டுடன் பகிர்ந்துள்ளார்.
நிஷாந்த் விஜயன் என்ற பயனர் ஒருவர், அலுவலகத்திற்கு நாளை நான் விடுப்பு எடுக்கவுள்ளதால், அதற்கான விடுப்பு கடிதத்தை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பாணியில் எழுதுமாறு சாட் GPTயிடம் கேட்டுள்ளார், அதற்கு சாட் GPT தந்த பதில் ஸ்கிரீன்ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த ட்வீட்டுக்கு, பதிலளித்து பேசிய சசி தரூர், இது வேடிக்கையானது, ஆனால் உண்மையில் நான், இவ்வளவு சாந்தமாக எழுதுவதை, என்னால் பார்க்க முடியவில்லை என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
Hilarious. But I really can’t see myself writing anything so jejune! https://t.co/C7jFjX0tSo
— Shashi Tharoor (@ShashiTharoor) January 16, 2023