மும்பைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல்.! என்ஐஏ அதிகாரிகள் – போலீசார் இணைந்து தீவிர விசாரணை.!
மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மும்பை போலீசார் இணைந்து முக்கிய இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
மும்பையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக மர்ம மிரட்டல் இ-மெயில் வாயிலாக வந்துள்ளது. அதில் தான் தாலிபான் அமைப்பை சார்ந்தவன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து இன்பினிட்டி மால் அந்தேரி, பிவிஆர் மால் ஜூஹு மற்றும் சஹாரா ஹோட்டல் விமான நிலையம் என மும்பையின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அங்கு தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மும்பை போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார் என்பது குறித்தும் விசாரணையை மும்பை போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், மும்பைக்கு இது மாதிரியான வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது புதிதல்ல. ஏற்கனவே பல்வேறு முறை இம்மாதிரியான வெடிகுண்டு மிரட்டல்கள் மும்பைக்கு வருவதும் அப்போது சோதனை தீவிர படுத்தப்படுத்தபடுவதும் குறிப்பிட தக்கது.