மும்பையில் 50 வயதுக்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மும்பையில் 50 வயதுக்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் உயிரிழக்கிறார்கள் என்று அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மும்பையில் 50 வயதிற்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் தொற்று காரணமாக இறந்துள்ளார்கள் என்று மும்பை மாநகராட்சி (BMC) தெரிவித்துள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 10.4% என்றும் இது மும்பையின் சராசரியை விட 5.4% ஆக உள்ளது என்று கூறியுள்ளது. இது 1,32,221 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 6,419 இறப்புகளின் வயது வாரியாக புள்ளிவிவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களில், 80-89 வயதுக்குட்பட்டவர்களில் மிக அதிகமான இறப்பு விகிதம் 21.2% ஆகவும், கொரோனா பாதித்த 3,131 பேரில் 664 பேர் இறந்துள்ளனர்.

70-79 வயதுக்குட்பட்ட, 9,463 கொரோனா நோயாளிகளில் 1,496 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 15.81% ஆக உள்ளது. 60-69 வயதுடையவர்களின் இறப்பு விகிதம் அதிகம் பதிவாகியுள்ளது. 18,454 நோயாளிகளில் இருந்து 2,122 பேர் இறந்துள்ளனர். இதன் இறப்பு விகிதம் 11.49% ஆகும். 9 வயதுக்கு குறைவான குழந்தைகளில் இறப்பு விகிதம் 0.49% மிகக் குறைவவும் என்றும் 2,439 குழந்தைகளின் 12 பேர் இறந்துள்ளனர் என்று கூறியுள்ளனர். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால் அவர்களின் நோயெதிர்ப்பு திறன் தோல்வியடைகிறது. மூத்த குடிமக்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்ற நோயுற்ற தன்மைகளும் அதிகம் இருப்பதால் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதுவரை, பி.எம்.சி 874,275 மூத்த குடிமக்களை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,097 பேர் ஆக்ஸிஜன் செறிவு 95 க்கும் குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இவர்களில் 5,036 மூத்த குடிமக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வாழ்கின்றனர். இதனிடையே, மும்பையில் நேற்று புதிதாக 1,350 கொரோனா உறுதியான நிலையில், 30 பேர் இறந்துள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 140,888 ஆகவும், தற்போது 19,463 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மும்பைக்கான இறப்பு விகிதம் 5.3%, குணமடைந்தவர்களின் விகிதம் 80% ஆக இருக்கிறது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

54 minutes ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

2 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

2 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

3 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

3 hours ago

ஒரே நாடு ஒரே தேர்தல்: ‘வசதி இருந்தா முடிஞ்சா பண்ணிக்கோங்க’ – விஜய் ஆண்டனி!

சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…

4 hours ago