ஓட்டுக்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடு… பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியுற்றவர் சேட்டை…
மத்திய பிரதேசத்தில், பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியுற்ற நபர், வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு மிரட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நீச் மாவட்டத்தில் அண்மையில் பஞ்சாயத்து தேர்தல் நடந்துள்ளது. அதில் அந்த தேர்தலில் தோல்வியுற்ற நபர் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
நீச் மாவட்டம் மானசா தாலுகாவில் தேவ்ரான் கிராமத்தில் அண்மையில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டி போட்ட வேட்பாளர் ராஜு தயாமா என்பவர் ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளார்.
ஆனால், தேர்தலில் அவர் தோல்வியுற்றுவிட்டார். இதன் காரணமாக கோபமுற்ற வேட்பாளர், தான் பணம் விநியோகித்த நபர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று, ஓட்டுக்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.
இதனை ஒரு நபர் விடியோவாக எடுத்து பதிவிடவே, போலீசார் இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.