மணிப்பூர் கலவரம்.! ஆம்புலன்சிற்குள் தாய் – மகன் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட கொடூரம்.!

Manipur Riots

மணிப்பூர் கலவரத்தில் ஆம்புலன்சிற்குள் தாய் – மகன் என இருவரையும் ஒரு கும்பல் உயிருடன் எரித்து கொன்றுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி எனப்படும் குறிப்பிட்ட பிரிவினரை குக்கி இன மக்களின் பழங்குடியினர் இன பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருவான கலவரம் ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் நீடித்து கொண்டு இறுகிறது. கிளர்ச்சியாளர்களின் துப்பாக்கி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பலர் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதுவரை 92 பேர் இந்த கலவரத்தில் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர் அமித்ஷா இரு பிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்த முயன்றும் இன்னும் கலவரம் ஓயவில்லை. இந்நிலையில், இந்த கலவரத்தில் மேலும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கலவரத்தில் காயமடைந்த 8 வயது சிறுவனை அவரது தாய் இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்சில் அழைத்து சென்றுள்ளார். அப்போது ஐரோசெம்பா பகுதியில் நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் ஆம்புலன்ஸை வழிமறித்து பாதுகாப்பு அதிகாரிகளை வெளியேற வைத்து பின்னர் தாய் – மகனை ஆம்புலன்சிற்குள் வைத்து தீயிட்டு எரித்து கொன்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்