மகாராஷ்டிராவில்,இரயில்வே தண்டவாளத்தின் கீழே விழுந்த குழந்தையை,உயிரைப் பணயம் வைத்து ரயில்வே ஊழியர் ஓடிப்போய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள,வாங்கனி இரயில் நிலையத்தின் நடைமேடையில் சிறுவன் ஒருவன் தனது தாயுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, தீடீரென்று கால் தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்தான்.அப்போது அதிவேகத்தில் தண்டவாளத்தில் விரைவு இரயில் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.இதனைப் பார்த்த இரயில்வே ஊழியர் மயூர் ஷேல்கே என்பவர்,தன்னுயிரைப் பற்றி கூட பொருட்படுத்தாமல் உடனே ஓடிச் சென்று அச்சிறுவனை தூக்கி அவனது தாயிடம் கொடுத்துவிட்டு,ரயில் அவ்விடத்தை கடந்து செல்ல ஒரு சில வினாடிகளே இருந்த நிலையில் தானும் நடைமேடையில் ஏறி தப்பித்துக் கொண்டார்.இதனால்,அங்கு நடைபெற இருந்த பெரும் அசம்பாவிதத்தை மயூர் தடுத்தார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,அந்த வீடியோவை இரயில்வே வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.இதனையடுத்து,தனது உயிரைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல்,சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய இரயில்வே ஊழியர் மயூர் ஷேல்கேவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…