மத்திய பிரதேசத்தில் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் பெண் கல்லூரி முதல்வரை முன்னாள் மாணவர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான்.
மத்திய பிரதேசத்தில் சான்றிதழ் தர தாமதம் ஆனதால் கல்லூரி பெண் முதல்வரை ஒரு மாணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் இந்தூரில், சிம்ரோல் பகுதியில் உள்ள தனியா மருந்தியல் கல்லூரியில் நடந்துள்ளது.
தீ வைப்பு : கல்லூரியின் முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா (24 வயது) என்பவருக்கு சான்றிதழ் வழங்க வேண்டி இருந்ததாக தெரிகிறது. இந்த சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் கால தாமதம் ஆன காரணத்தால், பெண் கல்லூரி முதல்வர் விமுக்தா ஷர்மா (வயது 54) என்பவரை அந்த மாணவன் பெட்ரோல் ஊற்றி எறிந்துள்ளான்.
80 சதவீத தீக்காயம் : இந்த கொடூர சம்பவத்தில் உடலில் 80 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் பெண் முதல்வர் விமுக்தா சர்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அடுத்து ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை வயர் அதிகாரி குப்தா கூறியுள்ளார்.
மதிப்பெண் சான்று : முன்னாள் மாணவன் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், தான் கல்லூரியில் பி பார்மா படித்ததாகவும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும், ஆனால் அவருக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை என்று ஸ்ரீவஸ்தவா கூறியதாக காவல்துறை உயர் அதிகாரி குப்தா கூறினார். ஸ்ரீவஸ்தவா ஏற்கனவே ஒரு கத்தி குத்து குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…