கேரள தேவாலயத்தில் உணவு உட்கொண்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தேவாலயத்தில் உணவு அருந்திய 100க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கீழ்வாய்ப்பூர் அருகே ஒரு தேவாலயத்தில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி ஞானஸ்தானம் விழா நடைபெற்றுள்ளது. அப்போது ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
அங்கு கொடுக்கப்பட்ட உணவை உட்கொண்டதில் 100க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதில் முதற்கட்டமாக கேட்டரிங் சேவை அளித்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது .