கேரளாவில் ஒரே நாளில் 1,547 பேருக்கு கொரோனா..7 பேர் உயிரிழப்பு.!
கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,547 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 1,547 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 7 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை 305 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 21,923 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 2,129 பேர் குணமடைந்தனர். இதுவரை 55,782 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.